முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒன்றாக செயல்பட்டு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்... டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

ஒன்றாக செயல்பட்டு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்... டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன்

ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன்

ஒன்றாக செயல்பட்டு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என்று டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்தனர்.

  • Last Updated :
  • Chennai, India

ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பை மீறி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி. அதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்கிடையில், திருச்சியில் தனியாக பொதுக்கூட்டமும் நடத்தினார். இந்தநிலையில், திடீரென்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார். அப்போது, பண்ரூட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஒரே லட்சியம்தான் அ.தி.மு.கவை மீட்டெடுப்பதுதான். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க காக்க ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘சி.பி.ஐ, சி.பி.எம் போல இணைந்து செயல்படுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். கட்சியை ஹைஜேக் செய்தவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். அ.தி.மு.க மீட்டெடுக்க வேண்டும் என்று நானும், சகோதாரர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம்.

ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமும். நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் அறிந்தவர்கள். எங்களிடம் மனதளவில் எந்த வெறுப்பும் இல்லை.. நாங்கள் சுயநலத்துடன் இணையவில்லை.. உண்மையான தொண்டர்கள் கையில் அதிமுக ஒப்படைப்போம்’ என்று தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன்- ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு.... முக்கிய அறிவிப்பு வருமா?

top videos

    தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவர் தற்போது வெளியூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன். அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுச்செயலாளர் வழக்கு இன்னமும் நிறைவு பெறவில்லை’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: O Panneerselvam, TTV Dhinakaran