முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive : இந்துத்துவா கொள்கையால் பாஜக கர்நாடகாவில் தோற்றது - டிடிவி தினகரன்

Exclusive : இந்துத்துவா கொள்கையால் பாஜக கர்நாடகாவில் தோற்றது - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ராகுல் காந்தியின் நடை பயணமும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டது கர்நாடக தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்காலம் என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்துத்துவா கொள்கையால் கர்நாடகாவில் பாஜக தோல்வியடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்தும் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் கர்நாடக தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கர்நாடக மாநில என்றும் காங்கிரஸ் கோட்டை தான் என்றும் அதனை தற்போது காங்கிரஸ் நிருபித்துள்ளதாக தெரிவித்தார்.

டிடிவி தினகரன் பிரத்யேக பேட்டி

இந்த தேர்தலில் பாஜக கட்சி தவறான அணுகு முறையால் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டார். தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து இந்துத்துவா கொள்கையை பாஜக தூக்கி பிடித்ததாகவும் இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல் தோல்வி மூலம் தென் இந்தியாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என கூறிய டிடிவி, ராகுல் காந்தியின் நடை பயணமும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டது கர்நாடக தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்காலம் என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், நாடாளுமன்ற தேர்தல் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தான் கூட்டணி அமையும் என்றும் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளதால் அப்போது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறினார்.

top videos
    First published:

    Tags: TTV Dhinakaran