2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமமுகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அமித் ஷா தெரிவித்தாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்தும் எதிர்கால திட்டம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் திமுகதான் எங்களுக்கு எப்போதும் பொது எதிரி, எடப்பாடி பழனிசாமி துரோகி என்றும் சுய நலனுக்காக தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பணம் இருக்கும் தைரியத்தால் தவறான செயலில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக விமர்சித்தார்.
தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில், “கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமமுகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார். மேலும் அமமுகவை கூட்டணியில் சேர்க்காவிட்டால் 80 தொகுதிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அனைவரும் கூறியுள்ளனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அதனை மறுத்துள்ளார். இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தன்னிடம் கூறினார் என டிடிவி தினகரன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்திடம் நியாயம் இல்லை உண்மை இல்லை, எங்களிடன் உண்மை உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வமும் நானும் சுயநலத்திற்காகவும் பலவீனமாக இருப்பதால் இணையவில்லை என்றும் ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைக்கும் முயற்சி என தெரிவித்தார். ஓபிஎஸ் சந்திப்பு குறித்து சசிகலாவிடன் நான் எதும் பேசவில்லை என்றும் பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தற்போது தொடர்பில் பேசி கொண்டு இருப்பதாக அவரே கூறியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Exclusive : ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? - வியூகத்தை உடைத்த டிடிவி தினகரன்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Amit Shah, EPS, TTV Dhinakaran