முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive : ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? - வியூகத்தை உடைத்த டிடிவி தினகரன்!

Exclusive : ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? - வியூகத்தை உடைத்த டிடிவி தினகரன்!

வெல்லும் சொல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரனுடன் சிறப்பு நேர்கானல்

வெல்லும் சொல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரனுடன் சிறப்பு நேர்கானல்

ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பிரத்யேக பேட்டி அளித்தார். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்மையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்தும் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நடந்த சந்திப்பு குறித்து பேசிய டிடிவி, ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழு மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் சையது கான் என்ற எங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அதற்கு தான் எனக்கு விருப்பம் என்றும் ஓபிஎஸிடன் கேட்டு சொல்லுங்கள் என தெரிவித்ததாக கூறினார்.

இருப்பினும் நாங்கள் தொலைப்பேசியில் பேசிக்கொள்ளும் போது கூட தர்மயுத்தம் ஏன் நடத்தினேன் என என்னிடம் ஓபிஎஸ் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக வர வேண்டும் என நானும் விரும்பினேன். ஆனால் நீங்கள்தான் எனக்கு முதல்வர் பதவி கொடுத்து பின்னர் ஒன்றரை மாதத்தில் என்னை நீக்கம் செய்யுமாறு கூறியதால் தான் தர்மயுத்தம் நடத்தியதாக ஓபிஎஸ் தன்னிடம் கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Exclusive : இந்துத்துவா கொள்கையால் பாஜக கர்நாடகாவில் தோற்றது - டிடிவி தினகரன்

top videos

     உங்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் மீண்டும் உங்களுடன் இணைந்து செயல்பட்டால் உங்களது தொண்டர்கள் மற்றும் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாகவும் ஆட்சி பிடிக்க முடியாமல் போனது ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நின்றது தான், திமுகவை வீழ்த்த வேண்டும் என தொண்டர்கள் நினைப்பதை நானும் ஓ.பன்னீர்செல்வம் நினைப்பதால் தான் தற்போது ஒற்றிணைந்துள்ளோம் என்றார்

    First published:

    Tags: News18 Tamil Nadu, TTV Dhinakaran