முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கைக்குள் வந்த கட்சி.. அமமுக நிர்வாகிகள் பக்கம் திரும்பும் எடப்பாடி பழனிசாமி.. அடுத்தக்கட்டம் என்ன?

கைக்குள் வந்த கட்சி.. அமமுக நிர்வாகிகள் பக்கம் திரும்பும் எடப்பாடி பழனிசாமி.. அடுத்தக்கட்டம் என்ன?

எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன்

முன்னதாக, அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் நம்பிக்கை பெற்று முக்கிய நபராக இருந்த அக்கட்சியின் பொருளாளர் மனோகரன் அதிமுகவில் இணைந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அமமுக மாவட்ட நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் வேலை  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துரிதபடுத்தி வருகிறார்.

முன்னதாக, அஇஅதிமுகவின்  பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தது. இதையடுத்து, கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி மேற்கொன்டு வருகிறார்.  அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் திரும்பி வந்தால் இணைத்துக் கொண்டு செயல்படுவோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரே பேரூராட்சி தலைவராக இருந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், 2 தினம் முன் அதிமுக பொதச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், அவருடன் சில முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுகவில் இணைந்தனர்.

முன்னதாக, அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் நம்பிக்கை பெற்று முக்கிய நபராக இருந்த அக்கட்சியின் பொருளாளர் மனோகரன், சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும்  இணைந்தார்.

இதையும் வாசிக்ககர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு - புகழேந்தி

top videos

    அதிமுக ஆட்சியில் அரசு கொறடாவாக இருந்தார் மனோகரன். ஒரு மாதத்திற்குள் அமமுக வின் மிக முக்கிய இரண்டு நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்துள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் அதிமுகவில் மனோகரணுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Edappadi Palanisami, TTV Dhinakaran