முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்... டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமனம்..!

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்... டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமனம்..!

ஆவடி நாசர் - டி.ஆர்.பி.ராஜா

ஆவடி நாசர் - டி.ஆர்.பி.ராஜா

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

top videos

    இந்நிலையில் ஆளுநர் மாளிகை  வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வரின் பரிந்துரைப்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: CM MK Stalin, TN Cabinet, TRB