முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.2000 நோட்டு அரசு பேருந்தில் வாங்க மாட்டார்கள்.. ஆம்னி பேருந்தில் வாங்குவார்கள்..முழு விவரம்

ரூ.2000 நோட்டு அரசு பேருந்தில் வாங்க மாட்டார்கள்.. ஆம்னி பேருந்தில் வாங்குவார்கள்..முழு விவரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Rs 2,000 notes withdrawn: இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தசூழலில் நெல்லை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 23ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிபந்தனையால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்குவமாக எடுத்துரைத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் சிக்கலில் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.. மதுரை அருகே அனுமதி பெறாமல் குண்டுவெடிப்பு காட்சிகள்?

 இந்த நிலையில் ஆம்னி பேருந்தில் 2000 ரூபாய் வாங்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி சார்பில் வரும் 23ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பேருந்துகளில் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்கெட் விற்பனையின் போது ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் பயணிகளிடம் வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Omni Bus, RBI