முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓசூர் வழியாக செல்லும் இந்த 3 ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே அதிகாரிகள் தகவல்..

ஓசூர் வழியாக செல்லும் இந்த 3 ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே அதிகாரிகள் தகவல்..

ரயில்

ரயில்

இந்த விபத்தால் பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடியில் இருந்து உரம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சேலம் தர்மபுரி வழியாக சரக்கு ரயில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்றுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகில் உடையாண்டஹள்ளி என்ற இடத்தில் அதிகாலையில் 6 பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்ப்பட்டது.

இந்த தகவலையடுத்து உடனடியாக - சேலம் தர்மபுரி பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து  ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் முயற்சியில் காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தால் பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. மேலும் பெங்களூர் - எர்ணாகுளம், பெங்களூர் - சேலம், பெங்களூர் காரைக்கால் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதை என்பதால் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், மீட்பு பணிக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : செல்வம் (ஓசூர்)

top videos
    First published:

    Tags: Hosur, Train, Train Accident