முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுற்றுலா போக ப்ளானா? கொடைக்கானலில் இந்த பகுதிக்கு மட்டும் போகாதீங்க..!

சுற்றுலா போக ப்ளானா? கொடைக்கானலில் இந்த பகுதிக்கு மட்டும் போகாதீங்க..!

கொடைக்கானல்

கொடைக்கானல்

வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானல் காட்டின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

கோடை விடுமுறை என்றதும் முதலில் செல்லலாம் என  யோசிக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின் இளவரசி என்று சொல்லப்படும் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்காக மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல மக்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம்.

தற்போது சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது. ஆனால், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானல் காட்டின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ளது.

இந்த தீயால் மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் எரிந்து சாம்பலாகியது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு வெவ்வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றன. வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி இருக்கையில் தற்போது இந்த காட்டு தீ டால்பின் நோஸ் பகுதியில் பரவியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.

வழிமாறி போகக்கூடிய தன்மை கொண்ட கொடைக்கானல் காட்டில் இப்போது புகை நிரம்பி இருப்பதால் பயணிகள் இந்த வழியாக செல்லும்போது வழிமாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் காட்டுத்தீ டால்பின் நோஸ் பகுதியில் பரவி வருவதால் பயணிகள் தீவிபத்தில் மாட்டி கொள்ளாமல் இருக்க இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சுற்றுலா பயணிகள் இறந்ததால் அது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு காட்டுத் தீ பரவும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் டால்பின் நோஸ் பகுதிகளுக்கு செல்ல கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

First published:

Tags: Forest, Kodaikanal, Travel