முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive | காவலர்கள் மிரட்டி பொய் சொல்லவைத்தனர்- பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

Exclusive | காவலர்கள் மிரட்டி பொய் சொல்லவைத்தனர்- பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

Exclusive | காவலர்கள் மிரட்டி பொய் சொல்லவைத்தனர்- பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் தன்னை தாக்கிய விவகாரத்தில், காவல்துறையினர் மிரட்டியதால் தான் வாக்குமூலத்தை மாற்றிக் கூறியதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சூர்யா பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக துன்புறுத்தியதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது பாதிக்கப்பட்ட 8-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தினர். அவருடைய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.

வைகுண்டனின் மறுவடிவமே முதல்வர்... அமைச்சர் சேகர் பாபு புகழாரம்

இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக சாட்சியளித்த விசாரணைக் கைதி சூர்யா, கீழே விழுந்ததில் தான் தனது பற்கள் உடைந்ததாக கூறி பல்டி அடித்தார். இந்தநிலையில், செவ்வாய்கிழமை சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

top videos

    அப்போது அவர் தனது பேரன் சூர்யாவின் பற்களை போலீஸார் தான் பிடுங்கியதாக கூறினார். இந்தசூழலில் பற்களைப் பிடுங்கியதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று காவலர்கள் மிரட்டியதால் தான், மாற்றிக் கூறினேன். தன் மீது வழக்குப் போடப்படும் என்றும் காவலர்கள் மிரட்டினர்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

    First published: