முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.1000-க்கு மேல் கரண்ட் பில்.. கவுண்டர் கிடையாது - ஆன்லைனில் மட்டுமே செலுத்த மின்வாரியம் நடவடிக்கை

ரூ.1000-க்கு மேல் கரண்ட் பில்.. கவுண்டர் கிடையாது - ஆன்லைனில் மட்டுமே செலுத்த மின்வாரியம் நடவடிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

ரூ.1,000க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் தொகையாக செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டிற்கு மின்சேவை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணத்தை வசூல் செய்துவருகிறது. பொதுவாக இதற்கு முன்னர், ரூ.5,000 மேல் கட்டணம் செல்லும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கி வரவோலை எனப்படும் (டி.டி) அல்லது காசோலை மூலமாக மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது.

இதற்கு குறைவான கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் நேரடியாக செலுத்த முடியும் என இருந்தது. இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் பணிச்சுமையை குறைக்கும் விதமாக கவுண்டரில் செலுத்தும் அதிகபட்ச தொகை என்பது ரூ.5,000இல் இருந்து ரூ.2,000ஆக கடந்தாண்டு மாற்றப்பட்டது. இந்த தொகையை மேலும் குறைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, அலுவலக கவுண்டரில் செலுத்தும் அதிகப்பட்ச தொகை ரூ.1,000ஆக வைத்து அதற்கு மேல் உள்ள கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ, அல்லது வங்கிவரைவோலை, காசோலை போன்றவை மூலமாகவோ செலுத்த கோரப்பட்டுள்ளது. இதற்கு ஆணையம் அனுமதி தந்தாதல் அதிகப்பட்ச தொகை எனப்படும் ரூ.1,000 புதிய முறை நடைமுறைக்கு வரும்.

இதையும் படிங்க: உஷார் மக்களே...! தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

தற்போதைய கட்டண முறைப்படி, ஒரு வீட்டில் இரு மாதங்களில் மின் நுகர்வு 372 யூனிட்டுகளை தாண்டினால் கட்டணம் ரூ.1,000ஐ தாண்டிவிடும். இவர்கள் இனி மின்சார வாரிய அலுவலக கவுண்டரில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் வருவாயில் 74 சதவீத தொகை டிஜிட்டில் முறையில் வசூலிக்கப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும்.

First published:

Tags: Electricity bill, TNEB