முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜகவில் இணைந்த முன்னாள் காவல் அதிகாரி திருமாவளவன்!

பாஜகவில் இணைந்த முன்னாள் காவல் அதிகாரி திருமாவளவன்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு தான் தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள காரணம் என்று தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடலூர் மாவட்டதை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற காவலர் திருமாவளவன் பாஜகவில் இணைந்தார்.

கடலூர் மாவட்டம், சேர்ந்தவர் திருமாவளவன், காவல்துறையில் 15 ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றி வந்திருக்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் அந்த பகுதிக்கு மக்களுக்கு தொடர்ந்து அவர் செய்து வந்திருக்கிறார்.  இந்த நிலையில் இளம் வயதில் இருந்து அரசியல் ஆர்வம் இருந்த காரணத்தினால் விருப்ப ஓய்வு பெற்று இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு தான் தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள காரணம் என திருமாவளவன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP