முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் விவகாரம் : நாளை பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் விவகாரம் : நாளை பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக, நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநரால்  ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது.  இதற்கிடையே ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் அண்மையில் பேசியது சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நாளை தமிழக சட்டமன்றம் மீண்டும் கூடும் நிலையில், ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார் என்றும் கூறப்படுகிறது.

கட்டாயம் வாசிக்க: ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்... திமுக கூட்டணி வெளியிட்ட அறிவிப்பு..!

முன்னதாக, கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அப்படியே வாசிக்காமல், சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் ஆளுநர் வாசித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

top videos

    இதையடுத்து, தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும்  உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: CM MK Stalin