முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்திய நிலையில், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ், வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் களஆய்வு செய்திருந்தார். அதன்பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த கையோடு, கடந்த 26ம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளோடு ஆய்வு நடத்தினார்.
இந்த கள ஆய்வில், துறைச் செயலாளர்களோடு மட்டும் ஆய்வு நடத்தாமல், அனைத்துமட்ட அலுவலர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, ஆய்வுப் பணிகளில் முதல்வர் ஈடுபட்டார். மேலும், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த உழவர், மீனவர், குறு சிறு தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு குறு முதலீட்டாளர் சங்கப் பிரதிநிதிகள், அரிசி ஆலைப் பிரதிநிதிகள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதையும் வாசிக்க: விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு.... விலக்கு அளிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அதிகாரிகள் பணியிடை மாற்றம்: இந்த நிலையில், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு, ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநராக செல்வராணியும், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ணப்ரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் துணை எஸ்.பி. பார்த்திபனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin