முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா : நாளை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா : நாளை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான நாளை மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்

  • Last Updated :

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான நாளை மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, மசோதா தொடர்பாக, ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தையும் பேரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனத் தொடர்ந்து விவாதமும் நடைபெற உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published: