தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தின் மீது பேசிய பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்க ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போய்விடும் என்று தெரிவித்தார். அதோடு, முதலமைச்சர் 10.5 சதவீத இடஓதுக்கீட்டை செயல்படுவார் என்பதலில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் ஆனால் ஒரு மாதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று இதே பிரச்சினை குறித்து உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது நாளை வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இப்போது இதே பிரச்சனை எழுப்பி இருக்கிறார். இந்த துறையின் மானிய கோரிக்கை இன்று இருக்கிறது என்று கூறி இரண்டு நிமிடத்தில் பேச சபாநாயகர் உத்தரவிட்டிருந்தாலும் உறுப்பினர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் என்றார்.
Also Read: உதயநிதி பேசியதில் என்ன தவறு..? மகனுக்காக காரசாரமாக விவாதித்த முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக ஆட்சியில் இருந்தபோதும் கலைஞர் இருந்தபோது 69 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி கொண்டு வந்தாரோ,அதே போல இதையும் கொண்டு வர முயற்சி செய்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார். மேலும், 10.5 சதவீதம் எந்த நிலையில் கொண்டுவரப்பட்டது என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் எங்களை பொறுத்தவரை யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு என்று பார்க்காமல், இந்த அரசு ஆட்சிக்கு வந்த உடனே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமூகச் சேர்ந்த வன்னியருக்கு பயனுள்ளதாக கருதி நாங்களும் உடனடியாக அமல்படுத்த முயற்சி ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்ததற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்பது உறுப்பினருக்கு தெரியும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஆணையம் ஈடுபட்டு வருவதாகவும், மூன்று மாத காலத்திற்குள் பணியை நிறைவேற்றவில்லை என்பதால் தான் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, PMK, Vanniyar Reservation