முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள்.... எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள்.... எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து செய்தி

தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து செய்தி

இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவர்ஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu |

சென்னை கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை எனும் இளைஞர், நேற்று (மே 19ம் தேதி) அதிகாலை சுமார் 5-30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பினார். இவர், அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரத்தை எட்டி அடைந்த ராஜசேகர் பச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், "பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவர்ஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்க:  500 சந்தேகங்கள்... 1000 மர்மங்கள்... 2000 பிழைகள்! - ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

முன்னதாக, இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட்-2 படைப் பிரிவில் ஹவில்தாரராகப் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவகுமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார்.

First published:

Tags: CM MK Stalin, Everest, Mount Everest