முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-க்கு தடுமாற்றம் ஏன்?" - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

“கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-க்கு தடுமாற்றம் ஏன்?" - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கு

சிபிசிஐடி விசாரணையில் கோடநாடு குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Last Updated :
  • Chennai, India

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த டிஎஸ்பி கனகராஜிடம், சென்னையில் உள்ள இல்லத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடநாடு வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரனையில் நிச்சயமாக உண்மை வெளிவரும் என்றார். மேலும் பேசியவர், “ கோடநாடு பங்களா என்பது அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்களின் முகாம் அலுவலகமாக பயன்படுத்திய பங்களா. அங்கு மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து எல்லாம் நடந்திருக்கின்றது.

ஆட்சி காலத்தில் முறையாக கண்டுபிடித்து இருந்தால் இப்போது எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிபிசிஐடி விசாரணையில் கோடநாடு குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட எதிரிகள் 11.1.2019 அன்று டெல்லியில் தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் என்பருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் சாட்டினர். அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தும் வகையில் வழக்கு தொடர்ந்தது யார்?” என்று கேள்வியெழுப்பினார்.

top videos

    சிபிசிஐடி விசாரணையில் நிச்சயமாக உண்மை வெளிவரும். கோடநாடு வழக்கில் சிபிஐக்கு செல்ல உள்ளதாக கூறி முரண்பாடு , தடுமாற்றத்துடன் நடந்து கொள்கிறார் எதிர்கட்சி தலைவர்.நேற்று எதிர்கட்சித் தலைவர் 48 நிமிடம் அவர்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பற்றி கூறினார். அதையெல்லாம் நாங்கள்தான் இப்போது செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள்தான் செயல்படுத்தி வருகிறோம்.” என்றார்.

    First published:

    Tags: Edappadi palanisamy, MK Stalin, Tamil News, TN Assembly