முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

தமிழக அமைச்சரவை மாற்றம்

தமிழக அமைச்சரவை மாற்றம்

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தொழிற்துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எலெக்ட்ரிக் கார் ஆலை அமைக்க உள்ளது. இந்நிலையில், சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் புதிதாக தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மின்சார வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக உருவாகியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டாலும், தொழில்துறையினருக்கு முழு ஆதரவை அளிப்போம் என்று முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

top videos

    இன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராகவும், மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகவும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

    First published:

    Tags: CM MK Stalin, Tamil Nadu, TN Cabinet