முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கலாகிறது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கலாகிறது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்படுகிறது.

நேரமில்லா நேரத்தில், கவனஈர்ப்பு தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் கொண்டுவர உள்ளன. இதன்மீதான விவாதம் முடிவடைந்ததும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் அப்போது தெரிவித்தார்.

top videos

    இந்நிலையில், இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யும் முதலமைச்சர் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கான விளக்கத்தையும் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது. வியாழக்கிழமையே இந்த மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கும். இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.

    First published:

    Tags: MK Stalin, Online rummy, TN Assembly