முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TN Budget 2023 | அரசுப் பள்ளி சத்துணவில் கடலை மிட்டாய் சேர்க்கப்படுமா? எதிர்பார்ப்பில் கோவில்பட்டி உற்பத்தியாளர்கள்

TN Budget 2023 | அரசுப் பள்ளி சத்துணவில் கடலை மிட்டாய் சேர்க்கப்படுமா? எதிர்பார்ப்பில் கோவில்பட்டி உற்பத்தியாளர்கள்

கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்

TN Budget 2023 | நெல்லை அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி என ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு அடையாளம் உண்டு. அதே போல் கோவில்பட்டி என்றால் அதன் பெருமை கடலை மிட்டாயை சேரும் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் கடலை மிட்டாய் சேர்க்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறுமா? என கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சத்துணவில் கடலை மிட்டாய் சேர்க்கப்படுவது தொடர்பான அறிவிப்புகளுக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி என ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு அடையாளம் உண்டு. அதே போல் கோவில்பட்டி என்றால் அதன் பெருமை கடலை மிட்டாயை சேரும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கரிசல் மண்ணில் விளைந்த கடலை பருப்பு, தாமிரபரணி தண்ணீர் மற்றும் இனிப்பு பாகு ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சுவை மிகுந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

இதன் எதிரொலியாக கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 150 க்கும் அதிகமான கடலை மிட்டாய் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் காலை உணவு வழங்கும் திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாயைச் சேர்க்க வேண்டும் என கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முட்டை விரும்பாத பள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது போன்று, தமிழகத்திலும் அறிவித்தால் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் உயரும்.

TN Budget 2023: மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு வெளியாகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

கடலை மிட்டாய்களின் தரத்தை சோதனையிட கோவில்பட்டியிலேயே பகுப்பாய்வுக் கூடம் அமைப்பது தொடர்பாக அரசு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Kovilpatti, TN Budget 2023