முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்வதா? அண்ணாமலை கண்டனம்

ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்வதா? அண்ணாமலை கண்டனம்

ஆவின் - அண்ணாமலை

ஆவின் - அண்ணாமலை

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனையில் களமிறங்க உள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளியை முன்னதாக வெளியிட்டது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய  திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்த புள்ளியில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த, அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், ‘2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு. அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

top videos

    உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    First published:

    Tags: Aavin, Annamalai