கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில பாஜக இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து கன்னட வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்.#ApologiseAnnamalai
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 27, 2023
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் பாஜக கட்சியினரை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி @KanimozhiDMK அவர்களே.
ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக்… https://t.co/3UJlqtMrk5 pic.twitter.com/JBqsNoxIW7
— K.Annamalai (@annamalai_k) April 27, 2023
இதனிடையே, கனிமொழியின் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி என்றும், அந்த நியதியை தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், திமுகவின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்களின் ஒரே பணி என்றும் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.