முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு... அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு... அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி அறிவிப்பு!

ஐ பெரியசாமி

ஐ பெரியசாமி

Minister periyasamy | 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளதால் 100 நாள் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006 -ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த நிலையில், 100 நாள்  வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,  “100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.

top videos

    மேலும்,  “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: TN Assembly