முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "சிறுவாணியில் தடுப்பணை ஆய்வு செய்து நடவடிக்கை" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

"சிறுவாணியில் தடுப்பணை ஆய்வு செய்து நடவடிக்கை" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

துரைமுருகன்

துரைமுருகன்

சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக குற்றச்சாட்டு

  • Last Updated :
  • Chennai, India

சிறுவாணி நீரைத் தடுக்கும் வகையில், கேரள அரசு அணை கட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக கூறினார். அணை கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது சிறுவாணிதான் என்றும். குடிநீர் ஆதாரப் பிரச்சனை என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

top videos

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கேரள அரசு 70 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கும் வகையில் அணை கட்டியிருப்பதாக அரசுக்கு செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகள் கூட்டு களஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துரைமுருகன் உறுதி அளித்தார்.

    First published:

    Tags: ADMK, Durai murugan, TN Assembly