முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அப்பாவின் கனவு... வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி வெளியான உருக்கமான தகவல்கள்..!

அப்பாவின் கனவு... வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி வெளியான உருக்கமான தகவல்கள்..!

மேஜர் ஜெயந்த்

மேஜர் ஜெயந்த்

மதுரை கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் சேர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அருணாச்சல பிரதேசத்தின், திராங் பகுதியில் உள்ள போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த். துணை விமானியாக இருந்த இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் இவரை குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் - மல்லிகா தம்பதியரின் மகன் ஜெயந்த். ஆறுமுகம் சிறு வயதில் ராணுவ வீரர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அதை அடைய முடியவில்லை. சென்னையில்  தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து  பணியாற்றி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பமும் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது.

அவரது மகன் ஜெயந்த் பள்ளி படிக்கும்போது இருந்து துப்பாக்கி சுடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். பின்னர், அதை முழுமையாக கற்று மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். மதுரை கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் சேர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்துள்ளார். கல்லூரி முடித்தவுடன் அதற்கான முயற்சியில் இறங்கி ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஜெயந்த் மேஜராக பதவி உயர்வு அடைந்துள்ளார். 3 வருடங்களுக்கு முன்பு ஜெயந்த், சாரா ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. பாட்டியுடன் அன்பாக இருக்கும் ஜெயந்த் தந்தையின் கனவை தனது கனவாக்கி அதில் சாதித்து விட்டார் என்று அவரது குடும்பமும் ஊர் மக்களும் பாராட்டி வந்தனர்.

ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. மேலும் பல பெரிய பதவிகளுக்கு சென்று சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த இழப்பு மொத்த கிராமத்தையும் கண்ணீரில் மூழ்க செய்துள்ளது.

First published:

Tags: Accident, Army