முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வரும் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

வரும் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

TN Agri Budget 2023 | ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 கோடி அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பு

  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், நடப்பு நிதியாண்டில் இதுவரை 12 ஆயிரத்து 648 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டு சராசரியை விட 89 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்தார். ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 கோடி அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்... இயற்கை விவசாயத்திற்கு ரூ.26 கோடி... சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!

மேலும், நெல் கொள்முதல் செய்ய, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 75 கூடுதலாக ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுவதும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றி கிடைக்க, இ-வாடகை செயலியுடன் இணைந்து விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Agriculture, TN Budget 2023