முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னைவாசிகள் கவனத்துக்கு.. அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் நேற்று பரவலாக மழை பெய்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரில் மழை தொடரும். வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காலை வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

top videos
    First published:

    Tags: Chennai, Heavy Rainfall, MET warning, Rain updates