முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு? அமைச்சர் தந்த விளக்கம்..!

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு? அமைச்சர் தந்த விளக்கம்..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டதாக மத்திய அரசு காரணம் கூறுவதாக அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், பற்றாக்குறை தீரும் வரை தேவை அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் விநியோகம் செய்யப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.இதுதொடர்பாக 2 முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக புகார் கூறினார்.

இதையும் படிக்க : மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா...? எப்படி கண்டறிவது...? பாதிப்புகள் என்ன?

மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறைக்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டது தான் என்றும் சக்கரபாணி கூறினார்.

எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியிருப்பதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடும் திட்டம் உள்ளதாகவும் சக்கரபாணி கூறினார்.

First published:

Tags: Ration Shop, Tamil Nadu, Wheat