முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் இன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

top videos

    பின்னர் வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அமைச்சர் செந்தில் பாலஜிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    First published:

    Tags: Senthil Balaji, Supreme court