மகாராஷ்டிராவில் சிவாஜிக்காக நடுக்கடலில் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கிறார்கள். அதுபோன்று, தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது தமிழா்களுக்கே பெருமை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தவறான வீடியோ ஒன்றினை அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். எதிரும் புதருமான அரசியல் - பழி வாங்கக் கூடிய அரசியல், பிளாக்மெயில் செய்யக்கூடிய அரசியல் அண்ணாமலை வந்த பின்னர் தான் இருந்து வருகிறது. திராவிட இயக்கத்தை பாரம்பரியமாக கொண்ட குடும்பம் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம். எனவே, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பொய்யான குற்றச்சாட்டை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர் மீது வைத்திருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது என்பது இதற்கு சான்று. ராகுல் காந்தி மாபெரும் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிடிஆர் திடீர் சந்திப்பு... ஆடியோ விவகாரம் காரணமா?
மேலும், ’கருணாநிதிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்வதில் என்ன தவறு. மகாராஷ்டிராவில் சிவாஜிக்காக நடுக்கடலில் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கிறார்கள். அது போல் எளிய தமிழரான கருணாநிதி வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். எனவே அவருக்கு சிலை அமைப்பதில் தவறில்லை. கருணாநிதியை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அவரை ஐந்து முதல் முதலமைச்சராக தேர்வு செய்தனர். கருணாநிதிக்கு சிலை எழுப்புவது என்பது வரவேற்க கூடியது என்றும் கூறினார்.
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைக்காக அண்ணாமலை சென்ற தமிழ் தாய் வாழ்த்து பாடல் முதலாவதாக மேடையில் ஒளிபரப்பானது. கர்நாடகாவில் இருந்தவர்கள் அதனை எடுத்துவிட்டு கன்னட பாடலை போட்டார்கள். அப்போது பேராண்மை மிக்கவராக இருந்திருந்தால் அண்ணாமலை தமிழ் பாடல் முழுவதுமாக ஒளிபரப்பு செய்து முடித்த பின்னர் கன்னட பாடலை போடுங்கள் என்று கூறியிருப்பார். ஆனால் வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டார் அண்ணாமலை. கர்நாடகாவில் கன்னட பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறல்ல. அதற்காக பாதியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஏன் நிறுத்தினார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: KS Alagiri