சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் 1916ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 1925ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கடந்த 2019ம் ஆண்டு முதல் புணரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் 5000 கூடுதல் இருக்கைகளுடன் புதிய கேலரி கட்டப்பட்டது.
இதுவரை ஏ,பி,சி,டி என பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிக்கு முதல் முறையாக பெயர் சூட்டப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து கட்டிய புதிய கேலரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து , கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கிரிக்கெட் மீது வைத்திருந்த ஆர்வமும், ஆரம்ப காலகட்டத்தில் சேப்பாக்கம் மைதானம் கட்டும் போது சுமார் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த அவரின் பங்களிப்பை கௌரவிக்கவே புதிய ஸ்டேண்டுக்கு அவரது பெயர் வைக்க திட்டமிட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சிகாமணி தெரிவித்தார்.
இதையும் படிக்க : ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது பாதிப்பா..? மனம் திறந்த ஹர்திக் பாண்டியா..
வயது மூப்பு காரணமாக இல்லத்தில் ஓய்வில் இருந்த சூழ்நிலையிலும் தனது குடும்பத்துடன் வீல்சேரில் அமர்ந்தபடியே பந்துவீசிய காட்சி, அவர் கிரிக்கெட் மீதுவைத்திருந்த தீராக்காதலை நமக்கு வெளிப்படுத்தியது. மேலும், தனது உதவியாளர் சண்முகநாதனிடமும் அவ்வப்போது ரன்களை கேட்பார் கருணாநிதி. முதலமைச்சராக கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை நேரில் கண்டு ரசித்து தோனி உள்ளிட்ட வீரர்களிடம் போட்டோ எடுத்தும் மகிழ்ந்துள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானம், குஜராத் நரேந்திர மோடி மைதானம் ஆகியவற்றின் வரிசையில் கலைஞர் கருணாநிதியின் பெயர் சேப்பாக்கத்தின் அடையாளமாக உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க காத்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chepauk, CM MK Stalin, Cricket, DMK leader Karunanidhi, MS Dhoni, Udhayanidhi Stalin