முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் மது குடிப்போர் எண்ணிக்கை குறைவு.. கொரோனாவுக்கு பிறகு ஏறவில்லை...

தமிழ்நாட்டில் மது குடிப்போர் எண்ணிக்கை குறைவு.. கொரோனாவுக்கு பிறகு ஏறவில்லை...

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu Assembly 2023 | அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு 32 ஆயிரம் கோடியும், இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடியும் தமிழ்நாடு அரசு வருவாய் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வேட்டியை மடித்து கட்டிய மனோஜ் பாண்டியன்.. தடுத்த ஓபிஎஸ்.! சட்டப்பேரவையிலும் எதிரொலித்த அதிமுக இரட்டைத் தலைமை விவகாரம்!

top videos

    இந்த ஆண்டு 25% மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. கடந்த கொரோனா காலத்தில் மது நுகர்வோர் வீழ்ச்சி இருந்தது. தற்போதும் மது நுகர்வோர் குறைவாக தான் உள்ளதே தவிர அதிகமாகவில்லை என்றார்.

    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan, Tasmac