வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், அவசரகால பணிகளை மேற்கொள்ளவும் சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்திற்கு ரகுபதியை பொறுப்பு அமைச்சராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Minister Meyyanathan, Tamil Nadu, TN Govt