முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

Sivakasi Fireworks Accident | உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • Last Updated :
  • Tamil Nadu, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விளாம்பட்டி பகுதியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பட்டாசுக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அறை வெடித்து தரைமட்டமான இந்த கோர விபத்தில், கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த கருப்பம்மாள் எனும் பெண், காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: டிடிவி தினகரனின் சொத்துகளை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார். அதேபோல காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Sivakasi