முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீன் உணவு பிரியர்களுக்கு ஷாக்... தொடங்கியது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்... கிடுகிடுவென உயரும் மீன்களின் விலை!

மீன் உணவு பிரியர்களுக்கு ஷாக்... தொடங்கியது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்... கிடுகிடுவென உயரும் மீன்களின் விலை!

மீன்பிடி தடை

மீன்பிடி தடை

மீன்பிடித் தடைக்காலத்தின் எதிரொலியாக மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

  • Last Updated :
  • Chennai, India

தமிழக கடலோர பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலம் நடைமுறையில் இருக்கும்.

தடைக் காலத்தை ஒட்டி சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 15 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீபிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் மீனவர்களுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.

top videos

    மீன்பிடித் தடைக்காலத்தின் எதிரொலியாக மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    First published:

    Tags: Fish, Fisherman