முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 14 இடங்களில் சதமடித்த வெயில்... அவதிப்படும் மக்கள்... இன்னும் வெயில் அதிகரிக்குமாம்...!

14 இடங்களில் சதமடித்த வெயில்... அவதிப்படும் மக்கள்... இன்னும் வெயில் அதிகரிக்குமாம்...!

வெப்பம்

வெப்பம்

வாழ்வாதாரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய சூழலில், கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 14 மாவட்டங்களில் வெயில் சதமடித்தது.

அதிகபட்சமாக வேலூரில் 107 புள்ளி 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தியிலும் வெப்பநிலை 107 டிகிரியை எட்டியது. சென்னையைப் பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி வெப்பம் பதிவானது.

Also see... 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரிப்பதால், கட்டுமானத் தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய சூழலில், கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Heat Wave, Summer, Summer Heat, Weather News in Tamil