தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. பின்னர் 2019ல் பணியாளர்களின் ஓய்வுக்கான வயது வரம்பு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட் பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 2022ல் பொதுப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும், ஆசிரியர் நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம் சார்பில் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த மே 9-ம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்ததைப்போல அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைவைக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த போராட்ட களத்திற்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, முதலமைச்சரின் கவனத்திற்கு ஆசிரியர்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் அமைச்சர் உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Minister Ponmudi, Teachers Protest