முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சொந்த வீடு, கார்களை விட்டுவிட்டு உயிர் தப்பி வந்துள்ளோம் - சூடானிலிருந்து தாயகம் வந்த தமிழர்கள்

சொந்த வீடு, கார்களை விட்டுவிட்டு உயிர் தப்பி வந்துள்ளோம் - சூடானிலிருந்து தாயகம் வந்த தமிழர்கள்

சூடானிலிருந்து திரும்பிய தமிழர்கள்

சூடானிலிருந்து திரும்பிய தமிழர்கள்

சூடான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்.

  • Last Updated :
  • Chennai, India

போர் தொடங்கியதில் இருந்து உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் உயிர் வாழ போராடியதாக சூடானில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

சூடான் நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நீடித்து வருகிறது. தொடர்ந்து ஆபரேஷன் காவிரி என்ற பெயரில் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

top videos

    நேற்று டெல்லி வந்த தமிழர்கள் 9 பேரில் ராஜசேகரன், தியா, கிருத்திகா, சோபியா, சந்தோஷ் குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசிய அவர்கள், ‘எங்கு திரும்பினாலும் துப்பாக்கிச் சூடு, கலவரம் என சூடானின் நிலை மாறியுள்ளதாகவும், தாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

    First published:

    Tags: Chennai Airport, Facebook Videos, War