பெண்களின் பாதுகாப்பு கருதி, தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அப்போது, போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் முன்வந்தால், முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, அடுத்த பயணங்களில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் இலவச பேருந்துக்களால் பெண்கள் மாதம் ரூ.888 சேமித்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவோருக்கு மத்திய அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன், மாநில அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார். மேலும், போக்குவரத்துத்துறையில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Sivasankar