முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து...

தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து...

மாதிரி படம்

மாதிரி படம்

May 1 Labour Day | மே தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி வருவதாக கூறினார். தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ், பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி என பல்வேறு முத்தான திட்டங்களை, உழைக்கும் சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றியது தி.மு.க ஆட்சிதான் என்பது வெள்ளிடை மலை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், உடலை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கியதாகவும் தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்தது தங்கள் இயக்கம் என்றும் ஓபிஎஸ் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் என்றார்.

First published:

Tags: CM MK Stalin, EPS, KS Alagiri, May 1, OPS