முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு விரைவுப்பேருந்தில் சலுகை கட்டண முறை ரத்து..

அரசு விரைவுப்பேருந்தில் சலுகை கட்டண முறை ரத்து..

மாதிரி படம்

மாதிரி படம்

TNSTC | கோடை விடுமுறையின்போது வருவாயை அதிகரிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை விடுமுறை முழுவதும் சலுகை கட்டண முறை நீக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு பயணிகளை ஈர்ப்பதற்காக சலுகை கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வார நாட்களில் பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய 10 முதல் 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் சலுகைகள் எதுவும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 7.5% வட்டியில் மகளிர் சேமிப்பு திட்டம்... வந்தது சூப்பர் அறிவிப்பு... உங்களுக்கு பலன் அளிக்குமா?

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறையையொட்டி ஜூன் 15ஆம் தேதி வரை சலுகை கட்டண முறை ரத்து செய்யப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதனால் வார நாட்களில் அரசு ஏசி மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 50 முதல் 150 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறையின்போது பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வருவாயை அதிகரிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: SETC