முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 16 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் - எந்த மாவட்டத்திற்கு யார்? - முழு விவரம் இதோ!

தமிழகத்தில் 16 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் - எந்த மாவட்டத்திற்கு யார்? - முழு விவரம் இதோ!

தலைமைச் செயலாளர் இறையன்பு

தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜ், அரியலூர் ஆட்சியராக ஆன்னி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுபோல் தஞ்சாவூருக்கு தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரிக்கு சராயு, புதுக்கோட்டைக்கு மெர்சி ரம்யா, நாமக்கலுக்கு உமா ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சி மாவட்டத்திற்கு கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டுக்கு கமல் கிஷோர், மதுரைக்கு சங்கீதா, சிவகங்கைக்கு ஆஷா அஜித், ராமநாதபுரத்துக்கு விஷ்ணு சந்திரன் ஆகியோர் ஆட்சியர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

top videos

    இதுபோல் நாகைக்கு ஜான் டாம் வர்கீஸ். ஈரோட்டிற்கு ராஜகோபால் சங்கரா, சேலத்திற்கு கிறிஸ்துராஜ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பூங்கொடி, தூத்துக்குடிக்கு ராகுல் நாத் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: District collectors