முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் இன்று 242 பேருக்கு கொரோனா... கோவையில் ஒருவர் பலி..!

தமிழ்நாட்டில் இன்று 242 பேருக்கு கொரோனா... கோவையில் ஒருவர் பலி..!

கொரோனா

கொரோனா

தமிழ்நாட்டில் தற்போது  1,216 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என செய்திக் குறிப்பில் தகவல்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் உள்பட 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது  1,216 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு 112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார். உப்பிலிபாளையத்தை சேர்ந்த அவருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளும் இருந்தது. அதனுடன் கொரோனா தொற்றும் உறுதியான நிலையில் உயிரிழந்துள்ளார் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Corona, Covid-19