ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், "முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி உரையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுக எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் அப்படிதான் பேசுவார்கள். அப்படித்தான் பேச வேண்டும். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் ஏன் எதிரிக்கட்சி போல் செயல்படவேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆளுநர் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்...
ஆளுநர் எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். மாநில அமைதியை குலைக்க வந்துள்ளாரா? தமிழ்நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கத்தான் அவரை அனுப்பியுள்ளார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என முதல்வர் பேசினார். சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் முதலமைச்சர் என்னிடம் அன்பாக உள்ளார். நானும் அன்பாகத்தான் உள்ளேன் என கூறியுள்ளார். அவர் இப்படி என்னை பாராட்டி விட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டுத்தர மாட்டேன். சட்டமன்றத்தில் அவை மரபை மீறிய ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றினோம் என பேசினார்.
பாஜக ஆட்சி செய்யக்கூடிய கர்நாடகம் மற்றும் மணிப்பூர் மாதிரி தமிழ்நாட்டில் கலவரம் நிகழ்கிறதா? கள்ளக்குறிச்சி பள்ளிகூட கலவரத்தை ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தினோம். கலவரங்கள் இல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் செல்வதைக் கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது.
ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு கையெழுத்து போடாமல் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா முழுவதற்கும் திராவிட மாடலைக் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, RN Ravi, Tamilnadu government