முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஷச் சாராயத்தை ஒழிக்ககோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்பாட்டம்... சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

விஷச் சாராயத்தை ஒழிக்ககோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்பாட்டம்... சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராயத்திற்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷச் சாராயத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பாஜக மகளிர் அணி சார்பில் நமிதா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முன்பு நடத்த போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...

 இதே போன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Annamalai, BJP