முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்...? - சட்டமன்றத்தில் அமைச்சர் முக்கிய தகவல்..!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்...? - சட்டமன்றத்தில் அமைச்சர் முக்கிய தகவல்..!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொதுப் பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்  நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில், “ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். இதேபோல அரசு கொறடா கோவி செழியன், “டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம்  தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்” வலியுறுத்தினார்.

top videos

    இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனையில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

    First published:

    Tags: Tamilnadu, TN Assembly