முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அலெர்ட்..!

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அலெர்ட்..!

மழை

மழை

Tamilnadu rain | வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியைத் தந்துள்ளது. வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், கோவை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Heavy rain, MET warning, Tamil Nadu, Weather News in Tamil