பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ப்ளஸ் டூ ஆங்கில பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்விலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றார். 2021-22ல் இடைநின்ற ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்த்ததாகவும், அதனால் பொதுத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 81 ஆயிரமாக உயர்ந்ததாகவும் கூறினார்.
முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது. நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாத தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளர் சுதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, Minister Anbil Mahesh, Tamilnadu