முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்...” 100 ஏக்கரில் காடு... அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

“நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்...” 100 ஏக்கரில் காடு... அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஆயிரம் குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துக்கொள்ளும் வகையில், முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 25 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2023-24 ஆம் ஆண்டில் மேலும் 50 பள்ளிகளில் 10 கோடி மதிப்பீட்டில் பசுமைப்பல்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் கால நிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஆயிரம் குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதையும் படிங்க; “பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி வளராது” - பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்...!

top videos

    தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். காலநிலைக்கேற்ற வாழ்வியல் முறை என்ற திட்டம் 50 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

    First published:

    Tags: Minister Meyyanathan, Moon, Tamil